ராசிபுரம் அருகே, 6-ஆம் வகுப்பு மாணவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளி மணிகண்டன் (28) போக்சோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். சேலம் ஆத்தூரைச் சேர்ந்த மணிகண்டன், பாலப்பாளையம் பனங்காடு பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மாணவரை சைக்கிளில் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மாணவர் பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, புதுச்சத்திரம் போலீஸார் அவரை கைது செய்தனர்.