இடங்கணசாலை நகராட்சி கூடுதல் அலுவலக கட்டடம் திறப்பு

சேலத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு இடங்கணசாலை நகராட்சி கூடுதல் அலுவலக கட்டடத்தை ரூ. 2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடம் மற்றும் காடையாம்பட்டி, ராசிக்கவுண்டனூர் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு தலா ரூ. 30 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடத்தினை திறந்து வைத்தார். 

இதனையடுத்து இடங்கணசாலை நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தளபதி, ஆணையாளர் பவித்ரா மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், நகராட்சி பணியாளர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி