சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயது கூலித்தொழிலாளி தினேஷ், அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது 8-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, மாணவியை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். குழந்தைகள் பாதுகாப்பு பிரிவின் புகாரின் பேரில், ஓமலூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தினேஷை கைது செய்தனர்.