ஓமலூர் அருகே பெண்களை தகாத வார்த்தையால் பேசிய வாலிபர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி சின்ன திருப்பதி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி நந்தினி (வயது 33). இவர் தனது அக்கா லட்சுமி (45) என்பவரும் தீவட்டிப்பட்டியில் உள்ள கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். 

கடந்த 30-ந் தேதி நந்தினியும் லட்சுமியும் தீவட்டிப்பட்டி அருகே நடந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் நந்தினி மற்றும் லட்சுமியை வழிமறித்து தகாத வார்த்தைகள் பேசி, உங்களை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். என்னை ஒன்றும் செய்ய முடியாது என கூறி மிரட்டினார். இது குறித்து நந்தினி தீவட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். 

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது பெண்களை தகாத வார்த்தையால் பேசியது நாச்சினம்பட்டியை சேர்ந்த முத்துராஜ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி