ஓமலூர் அருகே காடையாம்பட்டி வேடப்பன் காட்டுவளவு பகுதியை சேர்ந்த மதிவாணன், தீவட்டிபட்டி பெட்ரோல் பங்கில் நிறுத்தியிருந்த தனது டூவீலரை காணவில்லை. நீல நிற சட்டை அணிந்த ஒருவர் எடுத்துச் சென்றதாகத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து தீவட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பைக்கை திருடிய சுரேஷ் என்பவரை இன்று கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.