ஓமலூர் அருகே விபத்தில் தொழிலாளி பலி

ஓமலூரை அடுத்த பண்ணப்பட்டி ஊராட்சி சந்தை தடம் பகுதியைச் சேர்ந்த 44 வயதான நெசவு தொழிலாளி முத்தையன், வயிற்று வலிக்கு மாத்திரை வாங்கச் சென்றபோது, ஓமலூர்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பஸ் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முத்தையன் தனது தாயார் சவுந்தரத்துடன் வசித்து வந்தார்.

தொடர்புடைய செய்தி