ஓமலூர்: கூலித்தொழிலாளி அடித்துக்கொலை; மகன் வெறிச்செயல்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முருகேசன், புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்வராணி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து பல்பாக்கியில் வசித்து வந்தார். செல்வராணியின் மகன் மனோகர், தாயின் வீட்டிற்கு வந்து தங்கிய நிலையில், முருகேசனுக்கும் மனோகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறில் மனோகர், தனது தாயின் இரண்டாவது கணவரான முருகேசனை அடித்துக் கொலை செய்தார். ஓமலூர் போலீசார் மனோகரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி