சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள தாத்தியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தீரஜ் லால் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று (13.11.25) 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெறுகிறது. மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க நவம்பர் 15ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ள நிலையில், இந்த ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் இந்த கடைசி வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.