ஓமலூர்: தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பெண் குண்டர் சட்டத்தில் கைது

பூசாரிப்பட்டியைச் சேர்ந்த அலமேலு (25) என்பவர், ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொள்ளை உள்ளிட்ட தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டார். கடந்த மாதம் 18-ஆம் தேதி ஓமலூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் எஸ்பி பரிந்துரைத்தார். இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் சேலம் பெண்கள் சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி