தாரமங்கலம் சக்தி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 89 வயது மூதாட்டி பழனியம்மாளிடம், கியாஸ் மானியம் வந்துள்ளது என்றும், புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும் கூறி, கழுத்தில் இருந்த 5 பவுன் நகைகளை கழற்றி பீரோவில் வைத்த பிறகு, அந்த நகைகளை திருடிச் சென்ற சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி (35) என்பவரை தாரமங்கலம் போலீசார் கைது செய்து, நகைகளை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.