சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சலூன் கடை உரிமையாளர் முருகன், புதன்கிழமை காலை தனது கடையைத் திறக்க வந்தபோது, கடை வாசலில் மாந்திரீக பொம்மை, எலுமிச்சை, மஞ்சள், குங்குமம் வைத்து பில்லி சூனியம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அளித்த தகவலின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பில்லி சூனியம் வைத்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.