சேலம் மாவட்டம் ஓமலூரில் வாக்காளர் அடையாள அட்டை திருத்த விண்ணப்பப் படிவங்கள் விநியோகத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. ஒரே தொகுதிக்குள் முகவரி மாறியவர்களுக்கு கள அலுவலர்கள் நேரடியாக விண்ணப்பப் படிவங்களை வழங்காமல், பழைய முகவரிக்கு அருகில் உள்ளவர்களிடம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பல இடங்களில் விண்ணப்பப் படிவங்கள் தொலைந்து போனதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இது வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்பட வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.