தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஆர்.சி. செட்டிப்பட்டியைச் சேர்ந்த ஜனரஞ்சன் மற்றும் ஜன அம்சபிரியன் ஆகிய அண்ணன் தம்பியை, திருட்டு வழக்கில் கைது செய்த ஓமலூர் போலீசார், அவர்கள் மீது கொலை, அடிதடி, கொள்ளை வழக்குகள் பதிவாகி இருந்ததை கண்டறிந்தனர். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதால், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. கவுதம் கோயல் பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி