இந்தப் போட்டியை காண பார்வையாளர்களுக்கு கேலரி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மின்னொளியில் இந்த போட்டி நடைபெறுகிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ஒரு லட்சம் ரூபாயும், ரூ.30 ஆயிரம் மதிப்பிலான சுழற்கோப்பையும் வழங்கப்படும். இதேபோல் பெண்கள் பிரிவில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான சுழற்கோப்பை வழங்கப்பட உள்ளது.
. இன்று மாலை 4 மணிக்கு போட்டி தொடங்கப்பட்டு, இரவு 10 மணி வரை நடைபெறும். நாளை மறுநாள் இறுதிப்போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்படும். இந்த நிலையில் இரண்டாம் நாள் போட்டியை நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணி அளவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.