ஓமலூர் அருகே தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நடுப்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவர், மதுபோதையில் வீட்டிற்கு வந்து தந்தையிடம் பனியார பார்சலை கொடுத்துள்ளார். தந்தை சின்னதுரை அதை வாங்க மறுத்ததால் ஏற்பட்ட தகராறில், கண்ணன் விறகு கட்டையால் தந்தையை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சின்னதுரை உயிரிழந்தார். ஓமலூர் போலீசார் உடலை கைப்பற்றி, கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி