சேலம் மாவட்டம் ஓமலூர் சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் உள்ள கழிவறையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பு பாம்பு ஒன்று தென்பட்டதாக கூறி பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து அங்கு வந்த ஓமலூர் தீயணைப்புத்துறையினர் அந்த பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்து சென்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஓமலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இந்த பாம்பு நுழைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.