சேலம்: 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளிக்கு 7 ஆண்டு ஜெயில்

சேலம் மாவட்டம் ஓமலூர் எடையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 43). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி எடப்பாடி பச்சப்பட்டி பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி பள்ளிக்கு செல்லும்போது அவரை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அழுது கொண்டு நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் கூறினார். இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து நேற்று (டிசம்பர் 11 ) தீர்ப்பு கூறப்பட்டது. அதில், சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த பழனிசாமிக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி