சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாத்திமா மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் இயக்க துணைத்தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சோனா மற்றும் எஸ்தர் மேரி ஆகியோர் செய்திருந்தனர். இந்த கண்காட்சியில் மாணவ, மாணவிகளின் பல்வேறு அறிவியல் படைப்புகள் இடம் பெற்று இருந்தன.