சேலம்: பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷம்; கிராம நிர்வாக அலுவலர் கைது

சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது பிளஸ்-2 மாணவி, கோவில் திருவிழாவுக்குச் செல்லும்போது பைபாஸ் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் (43) மாணவியிடம் ஆபாசமாகப் பேசி, சில்மிஷம் செய்ய முயன்றார். மாணவி அவரைத் தட்டி, சத்தமிட்டதால் பொதுமக்கள் திரண்டு வந்து பாலகிருஷ்ணனைப் பிடித்து தர்ம அடி கொடுத்து சிறைபிடித்தனர். அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விரைந்து வந்து, பொதுமக்களிடம் பிடிபட்ட பாலகிருஷ்ணனை விசாரித்து, கீழ் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி