ஓமலூர் அருகே தண்ணி தொட்டி பகுதியில் மர்ம நபர்கள் சலூன் கடையின் ஷட்டரை திறந்து திருட முயன்றனர். கடந்த இரண்டு நாட்களாக புளியம்பட்டி மற்றும் நெடுஞ்சாலை பகுதிகளிலும் திருட்டு சம்பவங்கள் நடப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், காவல்துறையினர் இரவு நேர கண்காணிப்பை தீவிரப்படுத்தி திருடர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.