ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா

ஓமலூரை அடுத்த பச்சனம்பட்டி ஊராட்சி மோட்டூர் காட்டுவளவு பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், அருகிலுள்ள கோழிப்பண்ணையால் பெருகிவரும் ஈக்களின் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று ஓமலூர் தாலுகா அலுவலகம் முன்பு ஈக்கள் தொல்லையை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் மற்றும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி