கருப்பூர் அருகே ஏடிஎம் கொள்ளை முயற்சி போலீசார் விசாரணை

சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே வெள்ளாளப்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் நேற்று அதிகாலையில் ஒரு மர்மநபர் கடப்பாரையுடன் நுழைந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றபோது அலாரம் ஒலித்ததால், கொள்ளை முயற்சியைக் கைவிட்டு அந்த மர்மநபர் தப்பிச் சென்றார். கருப்பூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி