சேலம் ஊராட்சி ஒன்றியத்தில், வட்ட முத்தாம்பட்டி ஊராட்சி புதுக்காலனியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட மக்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, சீரான குடிநீர் வழங்கக் கோரி வலியுறுத்தினர். அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.