இந்த நிலையில் காளிகவுண்டம்பாளையம் பகுதியில் வேலை செய்யும் பணியாளர்களிடம் குடிநீர் கட்டணம் கட்டினால் மட்டுமே உங்களுக்கு வேலை வழங்கப்படும் என ஊராட்சி பணியாளர்கள் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் நேற்று (டிசம்பர் 25) மாலை பணி முடியும் நேரத்தில் எங்களுக்கு சில பகுதிகளில் சீரான குடிநீர் வழங்கப்படவில்லை, நாங்கள் எப்படி பணம் கட்டுவது? என கேள்வி கேட்டு பணி நடைபெற்ற இடத்தில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் சமரசம் ஏற்பட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.