ஓமலூரில் தேசிய மின் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம்

சேலம் மாவட்டம் ஓமலூரில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் ஓமலூர் கோட்டம் சார்பில் மின் சிக்கன வார விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

உதவி செயற்பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் தொடங்கி தாலுகா அலுவலகம், கடைவீதி, பஸ் நிலையம் வழியாக பஸ் நிலையம் சென்று மீண்டும் அலுவலகத்தை வந்தடைந்தது. 

இதில் உதவி பொறியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டு சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்த தட்டிகளை கையில் ஏந்தி சென்றனர். முடிவில் உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி