அதிமுக கூட்டணியில் ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் இருக்கும் சூழலில், ராமதாஸின் ஆதரவு எம்எல்ஏ அருள் இன்று (பிப்.17) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.