காடையாம்பட்டியில் திட்ட பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டியில், ரூ. 3 கோடியே 38 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழா, முடிவுற்ற பணிகள் மற்றும் கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்க, அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு, புதிய தார்சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் அமைச்சர் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி