ஓமலூர் அருகே தலைமை ஆசிரியரை மிரட்டியவர் கைது

ஓமலூர் அருகே திண்டமங்கலம் பாலிக்கடை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆனந்த் (30), நேற்று மாலை நேஷனல் நகரில் உள்ள தனியார் பள்ளி முன்பு மதுபோதையில் தகாத வார்த்தைகளால் பேசி கொண்டிருந்தார். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஷ்கண்ணன் (46) தட்டிக் கேட்டபோது, ஆனந்த் அவரை திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி