ஓமலூர் அருகே கல்குவாரி குட்டையில் மிதந்த ஆண் சடலம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சின்ன அடக்கனூர் கிராமத்தில் உள்ள கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் மிதப்பதாக ஓமலூர் தீயணைப்பு துறை நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் தர்மலிங்கம் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று சடலத்தை மீட்டனர். இதனை தொடர்ந்து ஓமலூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவர் யார் எப்படி இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி