சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மூக்கனூர் பகுதியில் மர்மவிலங்கு கடித்து நாய் இறந்து கிடந்த நிலையில், வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அது சிறுத்தை புலி தாக்கியதால் ஏற்பட்ட உயிரிழப்பு என தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் சிறுத்தை புலியை பிடிக்க கூண்டு வைத்தும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் உள்ளதா என தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.