தனியாக இருந்த மூதாட்டியை கொலை; 3 பேர் கைது!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியேரிப்பட்டி ஊராட்சி அம்மன்கோவில்பட்டி பேராமரத்தூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னியம்மாள் (வயது 53) இவருடைய கணவர் பொன்னுசாமி இறத்துவிட்டார்.
பொன்னியம்மாள் வீட்டில் தனியாக வசித்ததுடன் வியசாயமும் செய்து வந்துள்ளார்.

கடந்த 4-ந் தேதி காணாமல் போன பொன்னியம்மாள் வீட்டில் கணேசன் இதுகுறித்து தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி மாயமானது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் அவர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதி இதையடுத்து சந்தேகத்தின் பேரில் பெரியேரிப்பட்டி பேராமரத்தூர் பகுதியை சேர்ந்த சித்துராஜ் (30), தாரமங்கலம் கருக்குப்பட்டி தனுஷ் (22) அம்மன் கோவில்பட்டி, நத்தக்காடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து (20) ஆகியோரை பிடித்து போலிசார் ஓமலூர் துணை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கடந்த 3ந் தேதி இரவு சித்துராஜி, தனுஷ், மாரிமுத்து என நாங்கள் 3 பேரும் சேர்ந்து மது அருந்திவிட்டு தனியாக இருந்த பொன்னியம்மாளிடம் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்த தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்து. கார் மூலம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றுக்கு கொண்டு சென்று உடலை ஆற்றில் வீசியது தெரிய வந்தது.

தொடர்புடைய செய்தி