சேலம்: கிடா வெட்டு பூஜை: எஸ்ஐ உள்பட 3 போலீசார் இடமாற்றம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் குற்ற சம்பவங்களையும் விபத்துகளையும் தடுக்க, கடந்த 21-ந் தேதி அதிகாலை ரகசியமாக கிடா வெட்டி பூஜை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட எஸ்பி விசாரணை நடத்தினார். இதன் விளைவாக, அன்றைய தினம் பணியில் இருந்த போலீஸ் எஸ்ஐ சேகர் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்திற்கும், எழுத்தர் வெங்கடாஜலம் கருமலைக்கூடல் போலீஸ் நிலையத்திற்கும், ஏட்டு ரமேஷ் நங்கவள்ளி போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி