ஜெயலலிதா பிறந்த நாள்: அடிமட்ட தொண்டர் ரூ.5000 நன்கொடை

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அடிமட்டத் தொண்டர் ஜெயபாலன், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க ரூ.5000 நன்கொடை வழங்கினார். அவரது அன்பளிப்பை ஏற்காடு எம்எல்ஏ சித்ரா மற்றும் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அருண் பெற்றுக்கொண்டு, ஜெயபாலனுக்கு சால்வை அணிவித்து பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி