வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று (நவ.6) அதிகாலை முதல் மிதமான மழை பெய்து, பின்னர் சாரல் மழையாக மாறியது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் சிரமத்திற்கு ஆளாகினர்.