ஓமலூர் அருகே பணம் வைத்து சூதாடிய கும்பல் கைது

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள அழகுசமுத்திரம் கொள்ளுகாயன் வீட்டு அருகே பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடிய, ஈகருக்கல்வாடி, அழகுசமுத்திரம் பகுதியை சேர்ந்த மோகன் குமார் (வயது 51), தனபால் (54), மாணிக்கம் (54), கலைவாணன் (50), செந்தில்குமார் (49) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் கருக்கல்வாடி சஞ்சீவிராயன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடியதாக பழனிசாமி (45), மணிகண்டன் (30), ராஜேந்திரன் (54), மாரியப்பன் (52) உள்பட 9 பேரை தாரமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 5 ஆயிரம் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி