ஓமலூரில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. வேலாசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் 143 மாணவ மாணவிகள் மற்றும் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 371 பேர் என மொத்தம் 514 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பேரூராட்சி தலைவர் செல்வராணி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.