ஓமலூர்-தாரமங்கலம் ரோட்டில் உள்ள வேலகவுண்டன் புதூர் எஸ். எஸ். கே. திருமண மண்டபம் அருகில் ஓமலூர் மேற்கு ஒன்றிய அ. தி. மு. க. சார்பில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, மாநில அளவிலான கபடி போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 80-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். மின்னொளியில் நடைபெறும் இரண்டாம் நாள் போட்டியை அ. தி. மு. க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைக்க வந்தார். அவருக்கு வீரர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இதையடுத்து போட்டியை தொடங்கி வைத்தார்.