ஓமலூர் அடுத்த புளியம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், தர்மபுரியில் இருந்து சேலத்தை நோக்கி வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் சுமார் ரூ. 3 லட்சம் மதிப்பில் இருந்தன. இது தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் இருந்து நெல்லைக்கு புகையிலை பொருட்களை கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.