சேலம், ஓமலூரில் திமுக மகளிர் அணியினர் வீடு வீடாகச் சென்று தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி வருகின்றனர். ஓமலூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் இந்த பரப்புரை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 4 வது வார்டு பகுதிகளில், கவுன்சிலர் சுமித்ரா தலைமையில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு, திமுக ஆட்சியின் சிறப்புகள் எடுத்துரைக்கப்பட்டன.