ஓமலூரில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதை தொடர்ந்து, ஓமலூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் திமுகவினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஓமலூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஓமலூர் நகர திமுக செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரமேஷ், பேரூராட்சி தலைவர் செல்வராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

தொடர்புடைய செய்தி