ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக மாற்றுத்திறனாளியிடம் மோசடி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோட்டகவுண்டம்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கோபால், நேற்று கருப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், வேலூரைச் சேர்ந்த ஒருவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ₹3 லட்சத்து 64 ஆயிரம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அதே நபர் கெங்கவல்லியைச் சேர்ந்த ராகுல்காந்தியிடமும் ₹95 ஆயிரம் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி