சேலம்: வளர்ச்சி பணிகள்; தொடங்கி வைத்த எம்எல்ஏ

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கந்தசாமி வட்டம், முத்துநாயக்கன்பட்டி, வட்டக்காடு ஆகிய 3 இடங்களில் ரூ. 33 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி, பெரியேரிப்பட்டி எரிக்கோடியில் ரூ. 8½ லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, முத்துநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சமையலறை, அதே பகுதியில் ரூ. 16 லட்சத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி ஆகியவற்றுக்கு ரூ. 67½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. 

முத்துநாயக்கன்பட்டியில் நடந்த விழாவுக்கு ஓமலூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் ராஜேந்திரன், விமல்ராஜ், செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி புதிய திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் முருகன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி