ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று நடைபெற்ற கொப்பரை தேங்காய் ஏலத்தில் 30 விவசாயிகள் மற்றும் 3 வியாபாரிகள் பங்கேற்றனர். 72 மூட்டைகள் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 222.01, குறைந்தபட்சமாக ரூ. 40.00, சராசரியாக ரூ.215.01 என மொத்தம் ரூ.3,90,458.07-க்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தெரிவித்தார். இந்த ஏலம் விவசாயிகளுக்கு நல்ல விலையை ஈட்டித் தந்துள்ளது.