சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலைய வளாகத்தில் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகளால் நடத்தப்படும் பொதுக்கூட்டங்களால், பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து நிலையத்திற்கு வெளியே பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றனர். இதனால், பயணிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் சாலையை கடந்து சென்று பேருந்தில் ஏற சிரமப்படுகின்றனர். பேருந்து நிலையம் பொதுக்கூட்டத் திடலாக மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.