சேலம் ஓமலூர் அடுத்த ஆட்டுக்காரனூர் அருண் நகரைச் சேர்ந்த கைத்தறி நெசவு தொழிலாளி சிவப்பிரகாசம், நேற்று முன்தினம் அதிகாலை தனது மகனை சேலம் புதிய பேருந்து நிலையத்தில் வழியனுப்பிவிட்டு டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். முத்துநாயக்கன்பட்டி பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, டூவீலரில் வந்த மூன்று வாலிபர்கள் அவரை வழிமறித்து, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 100 ரூபாயைப் பறித்துச் சென்றனர். இது குறித்து சிவப்பிரகாசம் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.