அருள்மிகு நீர் மாரியம்மன் கோவிலில் 60 ஆயிரம் மதிப்புள்ள 6 கிராம் தங்கத் தாலி, மல்லிகேஸ்வரர் கோவிலில் 35 ஆயிரம் மதிப்பிலான நான்கு கிராம் தாலி மற்றும் உண்டியல் பணம் திருடிச் சென்றுள்ளனர். சக்தி மாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் கோவிலில் தங்கம் வெள்ளி பொருட்கள் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று உள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓமலூர் அருகே ஒரே நேரத்தில் மூன்று கிராம கோவில்களில் திருட்டு நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.