சேலம் அருகே முனியப்பன் கோயில் விழாவில் எருதாட்டம்

ஓமலூர் அடுத்த முத்துநாயக்கன்பட்டி முத்து முனியப்பன் கோவில் திருவிழா கடந்த 30-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று சாமி கிணற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொது மக்கள் பொங்கலிட்டு ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டனர். மாலையில் நடைபெற்ற எருதாட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட எருதுகளை இளைஞர்கள் கயிறு கட்டி பங்கேற்றனர். சுற்றுவட்டார கிராம மக்கள் இதில் கலந்து கொண்டு கண்டுகளித்தனர்.

தொடர்புடைய செய்தி