ஓமலூர் சிறப்பு நிலை பேரூராட்சியில், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஓ.எம்.ரமேஷ் இன்று 68 தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் செல்வராணி, துணைத்தலைவர் புஷ்பா, திமுக நகரச்செயலாளர் ரவிச்சந்திரன், தளபதி நற்பணி மன்ற தலைவர் கே. ஆர். மகேந்திரன், செயல் அலுவலர், சுகாதார ஆய்வாளர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். தூய்மை பணியாளர்களுடன் அவர்களும் அமர்ந்து உணவருந்தினர்.