ஓமலூர் அருகே கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி காமாண்டப்பட்டி மாரியம்மன் கோவில் முதல் சரபங்கா ஆறு முனியப்பன் கோவில் வரை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை மற்றும் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. ஓமலூர் மணி எம்.எல்.ஏ. இதில் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். அதிமுக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.