சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டியில் உள்ள கேப்டன் விஜயகாந்த் விளையாட்டு அரங்கில் 10 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் பங்குபெறும் வட்டார அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது.
இதில் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவுகளில் கலந்து கொண்டு மாணவ மாணவியர்கள் விளையாடினர்.